சென்னையில் கை அகற்றப்பட்ட குழந்தை வபாத்
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிக்கைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் குழந்தை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குழந்தையின் தாயார் அஜிஸா, “ஒரு வாரமாக குழந்தைக்கு சுயநினைவே இல்லை. ஐசியூவில் இருந்த மூன்று நாட்களில் அவனுக்கு மூளை வேலை செய்யவில்லை” என கூறினார்.
தஸ்தகீர் - அஜிஸா தம்பதிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. 40 வாரங்களில் பிறப்பதற்குப் பதிலாக 32 வாரங்களிலேயே பிறந்த அந்தக் குழந்தையின் எடை மிகக் குறைவாக இருந்ததால் அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், குழந்தை பிறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, குழந்தையின் தலை அளவு அதிகரிக்க ஆரம்பித்தது. சராசரியாக 37 செ.மீ. இருக்க வேண்டிய தலையின் சுற்றளவு 61 செ.மீ. அளவுக்கு அதிகரித்தது.
இதனால், கடந்த ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி அந்தக் குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அதன் பெற்றோர் சேர்த்தனர். அங்கு சில நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, தலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால் அந்தக் குழந்தை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
அங்கு, தலையில் இருக்கும் நீரை வெளியேற்ற தலையிலிருந்து வயிற்றுக்கு ஒரு குழாய் பொருத்தப்பட்டது. தொடர் சிகிச்சைகளுக்குப் பிறகு பெற்றோர் வீடு திரும்பினர்.
குழந்தைக்கு தொடர் மருத்துவக் கண்காணிப்பு தேவைப்பட்டதால், பெற்றோர் ராமநாதபுரத்திற்குத் திரும்பாமல், சென்னையிலேயே தங்கிவிட்டனர்.
குழந்தை மே 29ஆம் தேதி மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அன்று இரவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, குழாய் பொருத்தப்பட்டது
இந்த நிலையில், குழந்தைக்குப் பொருத்தப்பட்ட குழாய், குழந்தையின் ஆசனவாய் வழியாக வெளியேறிவிட்டது. இதையடுத்து குழந்தை மே 29ஆம் தேதி மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. மீண்டும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அன்று இரவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, குழாய் பொருத்தப்பட்டது.
இதற்குப் பிறகு குழந்தைக்கு மருந்தும் திரவ உணவும் ஏற்றுவதற்காக அதன் வலது கையில் பொறுத்தப்பட்ட ஊசியின் காரணமாக, கை அழுக ஆரம்பித்தாகவும் செவிலியர்கள் அலட்சியமாக ஊசியை பொருத்தியதாலேயே இந்த நிலை ஏற்பட்டதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேசிய குழந்தையின் தந்தை தஸ்தகீர், "வியாழக்கிழமையன்று (மே 29) அந்த ஊசி பொருத்தப்பட்ட பிறகு குழந்தை ரொம்பவும் அழ ஆரம்பித்தது. அது வலியால் அழுகிறது என பெற்ற தாய்க்குத் தெரியாதா?
இதனால், என் மனைவி திரும்பத் திரும்ப செவிலியர்களிடம் சென்று குழந்தை வலியால் அழுவதாகக் கூறினார். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. இதனால், நான்காவது முறையாக குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றே காட்டினாள். அப்போது, இந்த ஊசியை அகற்றிவிட்டால் குழந்தைக்கு எப்படி மருந்தைச் செலுத்துவது என்று கேட்டார்கள். பிறகு, என் மனைவி வலியுறுத்தியதால் ஊசியை அகற்றினார்கள்.
பிறகு குழந்தையின் கை கொஞ்சம் கொஞ்சமாக கருக்க ஆரம்பித்தது. வெள்ளிக்கிழமை காலையில் வந்த மருத்துவரிடம் அதைச் சொன்னோம். அவர் ஒரு மருந்தை வாங்கித் தேய்க்கச் சொன்னார். அதைத் தேய்த்தோம். பிறகு யாரும் வரவில்லை. சனிக்கிழமையன்று விரல் நுனியில் தோல் உரிய ஆரம்பித்துவிட்டது. அப்போது வந்த மருத்துவர்களிடம் அதைக் காட்டினோம்.
பிறகு 11 மணிக்கு மேல் குழந்தையை ஸ்கேன் செய்தார்கள். அந்த ஸ்கேன் முடிவுகளைப் பார்த்த பிறகு, குழந்தையின் கையில் ரத்த ஓட்டம் இல்லாமல் போய்விட்டது. அதனால் கையை எடுக்க வேண்டும் என்றார்கள். இது முழுக்க முழுக்க செவிலியர்களின் தவறால்தான் ஏற்பட்டது," என்று குற்றம் சாட்டினார்.
குழந்தை எழும்பூர் மருத்துவமனையிலிருந்து ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கே குழந்தைக்கு 'வென்ட்ரிகிளோ பெரிடோனியல் ஷன்ட்' (ventriculoperitoneal shunt) பொருத்தப்பட்டது.
அரசு மருத்துவமனை தரப்பு சொன்னது என்ன?
ஆனால், குழந்தைக்கு ஏற்பட்டுள்ள குறைபாடே குழந்தையின் கையில் ஏற்பட்ட பிரச்னைக்குக் காரணம் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் தேரணி ராஜன் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் அவர் பேசினார்.
"குழந்தை 32 வாரங்களிலேயே பிறந்துவிட்டதால் கடந்த ஆண்டு இங்கு குழந்தை வந்தபோதே பல பிரச்னைகள் இருந்தன. அந்த குழந்தையைச் சோதித்தபோது தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, அது உறைந்திருந்தது. அதனால், தலையில் இருந்த 'வென்ட்ரிகிளை' அடைத்துக்கொண்டதால், நீர் செல்வது (Cerebrospinal fluid) செல்வது தடைபட்டிருந்தது."
"இதையடுத்து, குழந்தை எழும்பூர் மருத்துவமனையிலிருந்து ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கே குழந்தைக்கு 'வென்ட்ரிகிளோ பெரிடோனியல் ஷன்ட்' (ventriculoperitoneal shunt) பொருத்தப்பட்டது. அந்த சிகிச்சையின்போதே குழந்தைக்கு இதய முடக்கம் ஏற்பட்டது. பிறகு, தீவிர சிகிச்சை மூலம் குழந்தை உயிர்ப்பிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு மாதம் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு குழந்தை வீட்டிற்குச் சென்றது."
"ஒரு வாரத்திற்கு முன்பாக, குழந்தைக்குப் பொறுத்தப்பட்டிருந்த 'ஷண்ட்' வெளியேறிவிட்டது. இதையடுத்து குழந்தை மே 29ஆம் தேதி மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கப்பட்டது. மீண்டும் சோதனைகள் நடத்தப்பட்டு, அன்று இரவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மீண்டும் ஷண்ட் பொருத்தப்பட்டது. குழந்தை முன்கூட்டியே பிறந்ததால், அந்தக் குழந்தையின் ரத்தத்தின் திரவ நிலையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது.
Hyperviscosity என்ற நிலை ஏற்பட்டு, ரத்த ஓட்டம் மெதுவாக இருந்தது. வியாழக்கிழமையன்று தோலில் நிற மாற்றம் ஏற்பட்ட பிறகு ரத்தம் குழாய்களில் உறைந்திருக்கலாம் எனக் கருதி அதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டன."
"கையின் நிறம் மாறியது ஏன் என்பதை அறிய ஒன்றாம் தேதியன்று டாப்லார் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது அறியப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதி அகற்றப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்பதால், அடுத்த நாள் நண்பகல் அறுவை சிகிச்சை மூலம் கை அகற்றப்பட்டது," என்று தெரிவித்தார்.
ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்ட நிலையில், வலி இருப்பதாகச் சொன்னதால், அந்த ஊசி அகற்றப்பட்டதாகவும் அடுத்த நாளே வலி, வீக்கத்திற்காக மருந்து அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்த தேரணி ராஜன், குழந்தையின் விரல் நுனி கறுத்திருப்பது குறித்து மருத்துவமனையின் ரத்தவியல் மருத்துவர்தான் பார்த்து தெரிவித்ததாகக் கூறினார்.
ஊசியை அகற்றி இரு நாட்களுக்குப் பிறகே இது நடந்ததாகவும் அதற்குப் பிறகு டாப்ளர் ஸ்கேன் செய்யப்பட்டு, குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக கை அகற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், குழந்தையின் தந்தையான தஸ்தகீர் அதை மறுக்கிறார். "குழந்தையின் கையைப் பார்த்து மருத்துவர்கள் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள். அது தவறான தகவல். நாங்கள்தான் குழந்தையின் விரல் நுனி கறுத்துப் போய் தோல் உறிவதைக் கண்டுபிடித்து, மருத்துவர்களிடம் சொன்னோம்," என்கிறார் அவர்.
அலட்சியம் ஏதும் நடந்ததா என்பதை அறிய உயர்மட்ட மருத்துவர்கள் குழு ஒன்றை அமைக்க மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் பெற்றோருக்கு சந்தேகம் இருந்தால், தனியார் மருத்துவர்களை அழைத்து வந்துகூட சோதித்துக்கொள்ளலாம் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தில் அலட்சியம் ஏதும் நடந்ததா என்பதை அறிய உயர்மட்ட மருத்துவர்கள் குழு ஒன்றை அமைத்து மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
அதன்படி, ரத்த நாள சிகிச்சைத் துறையின் இயக்குநர், பொது மருத்துவத் துறையிலிருந்து ஒரு இயக்குநர், குழந்தைகளுக்கான குருதித் துறையின் மூத்த மருத்துவர்கள் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு நியமித்த விசாரணைக் குழு முன்பாக குழந்தையின் பெற்றோர் ஜூலை 3ஆம் தேதி ஆஜராயினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குழந்தையின் தாய் அஜிஸா, விசாரணையில் நடந்தது என்ன என்று விளக்கம் அளித்தார்.
குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது குறித்துப் பேசிய அவர், " ஜூன் 29ஆம் தேதி வியாழக்கிழமையன்று தான் என் குழந்தைக்கு அந்த ஊசியைப் போட்டார்கள். அதற்கு முன்பு வரை குழந்தை நன்றாகவே இருந்தது. ஊசி போட்டதற்குப் பிறகே குழந்தைக்கு பிரச்னை வந்தது. அன்றும், அதற்கு மறுநாளும் இரண்டு நாட்கள் குழந்தை அழுவது குறித்து அங்கிருந்த செவிலியர்களிடம் நான் முறையிட்டேன். என்னுடைய வற்புறுத்தலால்தான், குழந்தைக்கு கையில் இருந்த ஊசியை எடுத்தார்கள்.
குழந்தையின் வலது கை விரல் முதல் மணிக்கட்டு வரை கருஞ்சிவப்பு நிறத்தில் மாறிவிட்டிருந்தது. அந்த அளவுக்கு அவர்கள் அலட்சியமாக இருந்தார்கள். நான் பலமுறை எடுத்துக் கூறியும் அவர்கள் செவி கொடுத்துக் கேட்கவில்லை. உங்க பையனுக்கு லைன் நன்றாகவே இருக்கிறது. ஏன் எடுக்கச் சொல்கிறீர்கள்? இன்று எடுத்துவிட்டால் நாளை எப்படி மருந்து போடுவீர்கள் என்று கேட்டார்கள்.
பரவாயில்லை, மருத்துவரிடம் நான் பேசி வேறு மருந்து வாங்கிக் கொள்கிறேன், நீங்கள் இப்போது அதை எடுத்துவிடுங்கள் என்று நான் கூறினேன். அதுவரை லைன் நன்றாக இருப்பதாகக் கூறியவர்கள், பின்னர் அருகில் இருந்த பயிற்சி செவிலியரிடம், லைனை எடுத்துவிடு? லைன் வீங்கிவிட்டது? என்று சொல்லிவிடலாம் என்றார்.
அங்கிருந்த செவிலியர், மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் என் குழந்தை வலது கையை இழந்திருக்கிறது. இதைத்தான் நான் ஆரம்பம் முதல் சொல்லி வருகிறேன். நான் முதலில் கூறியபோதே செவிலியர்கள் அதைச் செய்திருந்தால் என் குழந்தைக்கு இந்த நிலைமை வந்திருக்காது. என் குழந்தைக்கு வந்த இந்த நிலைமை இனிமேல் வேறு யாருக்குமே வரக் கூடாது என்பதற்காகவே நான் இவ்வளவு தூரம் போராடுகிறேன்." என்று கூறினார்.
மருத்துவர்களை காப்பாற்றும் வகையில் அமைச்சர் பேசியதாக குற்றச்சாட்டு
மேலும் தொடர்ந்த குழந்தையின் தாய் அஜிஸா, "நேற்று என்னை நேரில் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் என்னுடைய குழந்தையை பல முறை குறை மாத குழந்தை என்றே குறிப்பிட்டார்.
அத்துடன், குழந்தை பல குறைபாடுகளுடனே இருந்ததாக அவர் கூறினார். எந்தவொரு தாயிடமும் அவர் குழந்தையை குறை மாத குழந்தை என்று கூறக் கூடாது. அதை அவர் விரும்ப மாட்டடார். ஆனால் அமைச்சர் அதைப் பல முறை கூறினார்.
குறை மாத குழந்தை குறைபாடுகளே இல்லாமல் இருக்கக் கூடாதா? இன்று எவ்வளவோ குழந்தைகள் குறை மாதத்தில் பிறந்து நன்றாக இல்லையா?
என் குழந்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தக் குறையும் இல்லாமல் நன்றாகவே இருந்தது. ஆனால், இந்த ஊசி போட்ட பின்னரே பிரச்னை தொடங்கியது. என் குழந்தையின் தலை சுற்றளவு 61 செ.மீ. என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது பேட்டியில் கூறினார்.
ஆனால், இன்று நான் அளந்து பார்த்த போது 53 செ.மீ. தான் இருந்தது. யார் அளித்த தகவலின் பேரில் அமைச்சர் அவ்வாறு கூறினார்? அரசு மருத்துவர்கள், செவிலியர்களை காப்பாற்றும் நோக்கிலேயே நடந்து கொள்கிறார்கள்." என்று குற்றம்சாட்டினார். bbc
Post a Comment