ஸ்பெயின் முஸ்லிம்களிடம் வீழ்த்தப்பட்ட பிறகு பாடப்பட்ட இரங்கல் கவி
(அந்தலூஸ்) இஸ்லாமிய ஸ்பெனின் வீழ்ச்சி
ஸ்பெயின் நாட்டின் ரன்தா நகரின் எழில் கொஞ்சும் காட்சியே படத்தில் காண்கிறீர்கள் .
அங்கு காணப்பட்ட பிரபல பள்ளிவாயல், இஸ்லாமிய அந்தலூஸ் வீழ்ச்சிக்குப் பிறகு தேவாலாயமாக மாற்றப்பட்டு, மிஹ்ராப் மாத்திரம் கட்டடக்கலை சின்னமாக, சுற்றுலாப் பயணிகளின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அபுல் பகா அல்-ரன்தி என்று அறியப்படும் பிரபல அந்தலூசிய கவிஞர் இந்த நகரைச் சேர்ந்தவர்தான். ஸ்பெயினின் வீழ்ச்சி காலப் பகுதியிலும் முஸ்லிம்கள் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, இனச் சுத்திகரிப்பு நடந்த காலத்திலும் வாழ்ந்த அவர், ஸ்பென் வீழ்ச்சி பற்றி பாடிய இரங்கல் கவிதை மிகப் மிகவும் பிரபலமானது:
ஒவ்வொன்றும் நிறைவை
அடையும் போதே குறையும்
வந்து விடும்-
சுகவாழ்வு கிடைக்கப்
பெற்ற எந்த மனிதனும்
கர்வம் கொள்ள வேண்டாம்-
நீ பார்ப்பது போலவே,
மாறிமாறி வருவதே
காலமென்பது-
சிலகாலம் இன்பம்
கிடைக்கப் பெறும் மனிதன்,
பலகாலம் துன்பப்பட வேண்டிவரும்-
காரூன் கட்டிக்காத்த
பொன்மாளிகை எங்கே!
இரம் தேச மாமன்னன் ஷத்தாத் எங்கே!
பாரசீகத்தை ஆட்டிப்படைத்த
பாரசீக மாமன்னர்கள் எங்கே!
விதி என்னும் நதியில்
அடிபட்டுச் சென்றனர்.!
ஆள் அடையாளம்
அற்றவர்களாக ஆகிவிட்டனர்!
குர்துபா மாநகருக்கு என்னவானது...?
எத்தனை பல மகத்தான பேரறிஞர்கள், மேதைகள் அங்கே வளம் வந்தனர்.!
பாங்கோசை கேட்கும் பள்ளிவாசல்கள்
தேவாலயங்களாக மாறிவிட்டன்!
ஆலய மணிகளும், சிலுவை
சின்னங்களும் தொங்கவிடப்பட்டன!
அசையாத மிஹ்ராப்களும்
கத்திக் கதறி அழுகின்றன.!
மரப்பலகை மிம்பர் மேடைகளும்
மாற்றம் கண்டு இரங்கள் பாடுகின்றன.!
எத்தனை பல பாவப்பட்டவர்கள்
தப்பிக்க மன்றாடினார்...
பலர் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
பலர் கொல்லப்பட்டனர்.
இருந்தும் மனித மனங்கள்
ஒரு சொட்டும் அசையவில்லை.
ஈமானும் இஸ்லாமும்
அடிமனதில் குடிகொண்டிருந்தால்,
இதற்காகவல்லவா மனமுருக வேண்டும்.
துக்க தினம் அனுஷ்டிக்க வேண்டும்...!
✍ அபுல் பகா ரன்தி / அந்துலூசிய கவிஞர்
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment