Header Ads



மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு, தீ வைத்த கணவன்


மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு வீட்டுக்கு தீ வைத்த நபர்  கைது செய்யப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.


களுத்துறை, கமகொட, ரஜவத்த பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இருவருக்கும் இடையில் சில காலமாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும், சந்தேகநபர் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை மது போதையில் வந்து ரப்பர் மெத்தை, தலையணைகள் மற்றும் துணிகளை வீட்டில் வைத்து விட்டு மனைவி இருந்தமை இதுவரையிலான விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  


தீயினால் வீட்டின் சமையலறை முழுவதும் சேதமடைந்துள்ளது, ஆனால் முறைப்பாட்டாளர் தனது ஆடைகளுடன் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.