ஹோட்டலுக்குள் பெண் படுகொலை
பண்டாரவளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பண்டாரவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அடம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
களனி கொனவல பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவர் குறித்த ஹோட்டலுக்கு நேற்றுமுன்தினம் வந்துள்ள நிலையில் உயிரிழந்த பெண்ணை இன்றைய தினம் விடுதிக்கு அழைத்து வந்துள்ளார்.
பின்னர் அந்த நபர் திடீரென ஹோட்டலை விட்டு வெளியேறியதும் சந்தேகத்தின் பேரில் விடுதி ஊழியர்கள் அவர்கள் இருந்த அறையை சோதனையிட்டனர். அங்கு பெண் இறந்து கிடந்துள்ளார்.
பொலிஸாரின் விசாரணையின் போது கூரிய ஆயுதம் மற்றும் விஷம் கொடுத்து இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய சந்தேகநபர் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Post a Comment