Header Ads



சாணக்கியனுக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


- எஸ்.எம்.எம்.முர்ஷித் -


முஸ்லீம்களின் காணிகளை பராமரிப்பதற்கு தடையாக இருப்பவர்கள், முஸ்லீம்களின் கச்சைத் துணிகளைகூட உருவிவிட்டு அனுப்பக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதால் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் என்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, நாவலடி பிரதேசத்தில் புதன்கிழமை (16) ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.


13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுமாக இருந்தால் முஸ்லீம் மக்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமைகளை பெற்றுத்தருவார்கள் என்று எதிர்பார்ப்பு நிராசையாக போய்விட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.


தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் போன்ற அரசியல்வாதிகள் இன்று களத்திலே இறங்கி, இனவாதத்துடன் இருபத்தைந்து ஏக்கர் தனியார் காணியை மகாவலி காணி என்றும் அரச காணி என்றும் அடையாளப்படுத்தியுள்ளனர்.


முஸ்லீம்களின் காணிகளை பராமரிப்பதற்கு தடையாக இருப்பவர்கள் 13ஆவது சட்டம் அமுலுக்கு வருகின்ற போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற முஸ்லீம்களின் கச்சைத் துணிகளைகூட உருவிவிட்டு அனுப்பக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதால், நாங்கள் இந்த சட்டம் திருத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.


ஓட்டமாவடி நாவலடியில் பதாதைகளை ஏந்தி ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதிவழியாக வாகன தொடரணியாக வந்து ஓட்டமாவடி பிரதேச சபை முன்பாக முடிவடைந்தது.


இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள், சமுக செயற்பாட்டார்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

No comments

Powered by Blogger.