இலங்கையர்களுக்கு ஓமான் எச்சரிக்கை
ஓமான் வெளியுறவு அமைச்சகம், ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ராயல் ஓமான் பொலிஸாரின் குடிவரவுத் திணைக்களம் ஆகியன இணைந்து, ஓமானில் சிக்கித் தவித்த 32 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை 17-08-2023, அன்று திருப்பி அனுப்ப உதவியதாக தூதரகம் இன்றைய தினம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சிக்கியுள்ளவர்கள் சுற்றுலா விசாவில் ஓமானுக்குள் நுழைந்தனர், பின்னர் சரியான வேலைவாய்ப்பைப் பெறாமல், விசா காலம் முடிந்த பின்னரும் ஓமானில் தங்கியிருந்த நிலையிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர் என்று ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் கடந்த ஆண்டு (2022) நவம்பர் முதல் இன்றுவரை ஓமானிய அதிகாரிகளின் ஆதரவுடன் சிக்கித் தவித்த 400க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்புவதற்கு வசதி செய்துள்ளதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் தொடர்ந்து மனித கடத்தல்காரர்களுக்கு பலியாக வேண்டாம் என்றும், உறுதிப்படுத்தப்பட்ட வேலைகள் இன்றி வருகை/சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வர வேண்டாம் என்றும் தூதரகம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.
எனவே, அனைத்து இலங்கையர்களையும் உரிமம் பெற்ற முகவர்கள் மூலம் மட்டுமே தொழில்களை தேடுமாறும் ஓமானுக்கு வருவதற்கு முன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில், தம்மை பதிவு செய்யுமாறும் தூதரகம் கோரியுள்ளது.
Post a Comment