Header Ads



மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் மின் துண்டிப்பு, துறவிகள் தண்ணீர் இல்லாமல் தவிப்பு


மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் மின்சாரம் கட்டணம் செலுத்தப்படாமையினால் மின் துண்டிக்கப்பட்டுள்ளது.


41 இலட்சம் ரூபா மின் கட்டணத்தை செலுத்தாமையினாலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் விகாரதிபதி வளவ ஹங்குனவேவே தம்மரதன தேரர் தெரிவிக்கையில்,


“இலங்கையில் பௌத்த மதத்தை ஸ்தாபித்த மையமாகவும், ஸ்ரீ மஹா போ சமிதுன் வரலாற்று புனித இடமாகவும் விளங்கிய மிஹிந்தலை புனித பூமியில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது.


மிஹிந்தலை புனித நகரத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் இப்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


இந்தவேளையில் மின் துண்டிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் உள்ள சந்நதியின் அறைகள், காவல் நிலையம், தொல்லியல் துறைகள் ஆகியவற்றை இருளில் மூழ்க வைக்கும்.


மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் தொல்லியல் துறைக்கு அரசு உடனடியாக பாதுகாப்பு வழங்க வேண்டும்.


இதேவேளை, கோயிலில் வசிக்கும் துறவிகள் தண்ணீர் இல்லாமல் தவக்கின்றனர்.


அது மாத்திரமல்லாமல் பிக்குகள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு கட்டணம் செலுத்தக்கூடிய தனியான மின் மீட்டர்களை பொருத்துமாறும் இலங்கை மின்சார சபையிடம் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.


கடந்த ஆண்டு முதலே 4.1 மில்லியன் ரூபா மின் கட்டணம் நிலுவையில் இருந்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.