அமரர் கதிர்காமர் குறித்து அலி சப்ரி
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமரர் லக்ஷ்மன் கதிர்காமரின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடங்களை பிரதிபலிக்கும் இலங்கையை உருவாக்குவோமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் சுட்டுக்கொல்லப்பட்டு நேற்றுடன் 18 வருடங்களாகியுள்ளன. இந்தநிலையில் அன்னாரை நினைவுகூர்ந்து அமைச்சர் அலிசப்ரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், இந்த புனிதமான நாளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரக்கமற்ற வன்முறையால் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த ஒரு சிறந்த இராஜதந்திரி லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவை போற்றுகின்றோம்.
அனைத்து இலங்கையரினதும் பொதுவான நோக்கத்துக்கான லக்ஷ்மன் கதிர்காமரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான அவரது அயராத முயற்சிகள் எமது தேசத்தின் வரலாற்றில் ஒரு அழியாத தடத்தை பதித்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
காலம் சென்ற லக்ஷமன் கதிர்காமர் அவர்களிடம் நீங்கள் கற்றுக் கொள்ள ஆயிரமாயிரம் விடயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் ஒரு புதிய விடயத்தைக் கற்றுக் கொள்வதில் அதிகமதிகமாக வாசிப்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக செயற்பட்ட அவர்கள் வௌிநாட்டு அமைச்சில் திறமையும், சிறந்த கல்வியும், அனுபவமுமிக்கவர்களுக்கு பதவி வழங்கப்பட வேண்டும் என்பதில் அவர் மிகவும் கவனமாக இருப்பார். அமைச்சர் ஆள்பார்வையில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
ReplyDelete