Header Ads



கஜேந்திரகுமாருக்குத் துணிவு இருந்தால்..? கம்மன்பில விடுத்துள்ள சவால்


பொலிஸாரைக் கண்டபடி விமர்சித்து அரசியல் செய்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தற்போது பொலிஸாரை தனது கொழும்பு வீட்டுக்கு வரவழைத்து பாதுகாப்பிற்கு நிறுத்தியுள்ளதாக புதிய ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 


அத்துடன் இது அவருக்கு வெட்கக்கேடான விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வடக்கில் தமிழ் மக்கள் மத்தியிலும், தெற்கில் சிங்களவர்கள் மத்தியில் இனவாத கருத்துக்களால் தனது அரசியலை முன்நகர்த்துகின்றார் கஜேந்திரகுமார்.


கொழும்பில் மக்களின் எதிர்ப்புக்குப் பயந்த அவர், முற்கூட்டியே பெருமளவு பொலிஸாரைத் தனது வீட்டுக்கு வரவழைத்து பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ளார்.


கஜேந்திரகுமாருக்குத் துணிவு இருந்தால் பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ள பொலிஸாரை அகற்றிவிட்டு மக்கள் முன்னிலையில் விவாதம் செய்ய வரட்டும் என சவால் விடுத்துள்ளார். 


1 comment:

  1. ​போலி அபிடெவிட் அடித்து அவுஸ்ரேலிய வர்த்தகரின் பணம் 700 மில்லியனைக் களவாடிய இந்த கம்மன்பிலவுக்கு தைரியமிருந்தால் களவாடிய பணத்தை அவுஸ்ரேலிய வர்த்தகருக்கு திருப்பித் செலுத்தட்டும். அதுவரையில் இந்தக் கள்ளனுயை பேச்சைச் கேட்க இந்த நாட்டு மக்கள் தாயராக இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.