Header Ads



ஓமல்பே சோபித தேரரிடம் மன்னிப்பு கேட்ட போதகர் ஜெரோமின் பெற்றோர்


பௌத்த மதம் தொடர்பில் அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் பெற்றோர் இன்று (18) இராமன்ய மகா பீடத்தின் சங்கத் தலைமையகத்திற்கு வந்து ஓமல்பே சோபித நாயக்க தேரரை சந்தித்துள்ளனர்.


இதன்போது போதகர் ஜெராம் வெளியிட்ட கருத்துகளால் பௌத்தம் மற்றும் பௌத்தர்களுக்கு ஏற்பட்ட அவமரியாதைக்காக மகா சங்கத்தினரிடமும், முழு பௌத்த சமுதாயத்திடமும் மன்னிப்பு கோரியிருந்தனர்.


இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.


பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஓமல்பே சோபித தேரர், தவறை புரிந்துகொண்டு வந்து மன்னிப்பு கேட்டால் பௌத்த சமூகமாக மன்னிக்க தயார் என தெரிவித்தார்.


"முதல் சுற்று கலந்துரையாடல் சுமூகமாக முடிந்தது. இந்த கலந்துரையாடலை தொடருவோம் என்று நம்புகிறோம்." என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.


இதனிடையே, போதகர் ஜெரோமின் தாயார் பெவின் பெர்னாண்டோ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,


"எங்கள் மகனின் வார்த்தைகள் பெரியவர்கள் அல்லது சிறியவர்கள் அனைவரின் மனதையும் புண்படுத்தியிருந்தால் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.


எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு மிக்க நன்றி." என தெரிவித்திருந்தார்.


பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் வணக்கத்திற்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.


இந்நிலையில், அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Oruvan

No comments

Powered by Blogger.