சக மாணவிகளுக்கு விஷம் கலந்த தண்ணீரை கொடுத்த மாணவி !
விஷம் கலந்த நீரை பருகிய மாணவியர் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்றைய தினம் நாரம்மல பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் பதிவாகியுள்ளது.
10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியரே இவ்வாறு விஷம் கலந்த நீரை பருகியுள்ளனர்.
மாணவி ஒருவர் அதே தரத்தில் கல்வி கற்கும் சக மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் விஷம் கலந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment