இலங்கை வம்சாவளி ஹைரா ரியாஸ்சின் அணி உலக சாம்பியனானது - அவரை வரவேற்க ஏற்பாடு
- Zacky Junaid, Vancouver, Canada -
தாய்லாந்தில் நடைபெற்ற சரவதேச ட்ரகன் போட் படகோட்ட போட்டியில் இலங்கை வம்சாவளி ஹைரா ரியாஸ்சின் 18 வயதுக்கு உட்பட்ட அணி முதலிடம் பெற்று உலக சாம்பியனானது.
இது பற்றி மேலும் அறிய வருவதாவது.
கனடா வங்கூவரில் வசிக்கும் இலங்கை கண்டி அக்குறணையை சேர்ந்த ரியாஸ் சித்தீக், ஷபானி தம்பதியினரின் புதல்வி ஹைரா ரியாஸ் அவர்களின் ட்ரகன் போர்ட் 18 வயதுக்கு உட்பட்ட கனடா அணி 4;32.877 நிமிடங்களில் 1 கிலோ மீட்டர் இலக்கை அடைந்து முதலாம் இடத்தை பெற்று உலகசாம்பியனானது. ஐக்கிய அமேரிக்கா 4;35.508 நிமிடத்தில் கடந்து இரண்டாம் இடத்தையும் அவுஸ்த்திரேலியா 4;36.286 நிமிடத்தில் கடந்து மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
ஹைரா ரியாஸ் அக்குறணை அஸ்ஹர் கல்லூரியின் முன்னால் அதிபர் சட்டத்தரணி அல்ஹாஜ் எம் எல் எம் சித்தீக், அல்ஹாஜ் ஏ ஆர் எம் உவைஸ் ஆகியோரின் பேத்தியுமாவார்.
தமது சமூகத்துக்கு பெருமை சேர்த்த ஹைரா ரியாஸ் எதிர்வரும் ஆகஸ்ட் 14 கனடா திரும்ப இருக்கும் நிலையில் இலங்கை முஸ்லிம்கள் அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment