பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்களில் மாற்றப்பட்டுள்ள முக்கிய விதிமுறை
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஆவணங்கள் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்ற முந்தைய விதிமுறைகள் நீக்கப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வழங்கப்பட்ட எந்தவொரு சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட நகல் இருந்தால், புதிய நகலை பெற வேண்டிய அவசியமில்லை என்றும் திணைக்களம் தெரிவிக்கிறது.
இது தொடர்பில் பதிவாளர் நாயகம் திணைக்களம், கல்வி, வெளிவிவகார அமைச்சுக்கள் மற்றும் குடிவரவு மற்றும் ஆட்கள் பதிவு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
எனினும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு பதிவேட்டில் திருத்தம் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே புதிய நகலை சமர்ப்பிக்க வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கின்றது.
Post a Comment