மஸ்ஜிதுல் ஹரம் ஜும்ஆவில் இன்று நடந்ததென்ன...?
- Hyder Ali -
மஸ்ஜிதுல் ஹராமில் இன்றைய ஜும்ஆவை கண்ணியமான இமாம் டாக்டர் அஷ்ஷைஃக் மாஹிர் இப்னு ஹம்து அல்மஃகலி حفظه الله ورعاه நடத்தினார்கள்.
ஜும்ஆ குத்பா பேருரையாற்றி முடிந்த பிறகு தொழுகை நடத்தும் போது உயர் ரத்த அழுத்தம் காரணமாக தொடர்ந்து அஷ்ஷைஃக் அவர்களால் தொழுகை நடத்த இயலவில்லை.
உடனடியாக ஹரமைன் நிர்வாகத்தலைவர் கண்ணியமான அஷ்ஷைஃக் டாக்டர் அப்துர்ரஹ்மான் அல்சுதைஸி حفظه الله ورعاه அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.
தற்போது கண்ணியமான இமாம் டாக்டர் அஷ்ஷைஃக் மாஹிர் இப்னு ஹம்து அல்மஃகலி حفظه الله ورعاه அவர்கள் நலமாக உள்ளார்கள். என்ற செய்தி கிடைத்துள்ளது.
அல்லாஹ் அஷ்ஷைஃக் அவர்களுக்கு பரிபூரண ஆரோக்கியத்தை வழங்கி தொடர்ந்து மஸ்ஜிதுல் ஹராமில் சேவை செய்ய நல்லுதவி புரிவானாக ஆமீன்
Post a Comment