Header Ads



முஸ்லிம் அரசியலில் புதிய முகவரி எழுதியவரின், நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள்


 தனது கொள்கைகளை விதையாக வீழ்த்தி முஸ்லிம் அரசியலில் புதிய முகவரி எழுதி தனது அரசியலில் தனித்தன்மையை உறுதிப்படுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜனாதிபதி சட்டத்தரணி பெருந்தலைவர் கலாநிதி எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் நினைவு தினமும் துஆ பிராத்தனையும் அடங்கிய தேசிய நிகழ்வு எதிர்வரும் 16ம் திகதி தலைவரின் தொகுதியான கல்முனை தொகுதியின் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச். எம். எம். ஹரீஸ் அறிவித்துள்ளார். 


தனது அறிக்கையில் மேலும், 


இந்நிகழ்வை உயிரோட்டமுள்ளதாக மாற்றியமைக்க தலைவர் அஷ்ரபை நேசிக்கும் உறவுகள் எல்லோரும் பிரதேசங்கள் கடந்து, மாறுபட்ட கட்சி கொள்கைகள் துறந்து ஒன்றிணைவோம். முஸ்லிம் அரசியலின் தந்தையாக நோக்கப்படும் அவரின் கொள்கைகள் காலத்தால் அழியாதவை. உள்நாட்டு இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கான தீர்வாகட்டும், அபிவிருத்தி விடயங்களாக இருக்கட்டும், நாட்டின் இறையாண்மையாகட்டும், தேசிய பாதுகாப்பாகட்டும், சர்வதேச ராஜதந்திர உறவுகளாகட்டும், வறுமை ஒழிப்பு, சமூக நீதி என்ற பல்வேறு விடயங்களிலும் தனித்தன்மை கொண்ட அந்த தலைவன் முன்வைத்த விடயங்களை நாம் கண்களூடாக பார்த்தவர்கள் ஏராளம். அவரை போன்ற கொள்கைகளை வகுக்கவும், நீண்டகால திட்டங்களை முன்மொழியவும் இதுவரை முடியவில்லை. அவ்வாறான வெற்றிகரமான திட்டங்களை அவர் முன்வைத்துள்ளார். 


இப்போதைய இளைஞர்கள் மத்தியில் இந்த பெருந்தலைவரின் கொள்கைகளை எடுத்துரைக்கும் இந்நிகழ்வில் இளைஞர்கள் அணிதிரண்டு வந்து கொள்கைகளை விதையாக வீழ்த்தி முஸ்லிம் அரசியலில் புதிய முகவரி எழுதிய தலைவரின் வாழ்வை அசைபோட ஒன்றிணைவோம். தனது அரசியலில் தனித்தன்மையை உறுதிப்படுத்திய பெருந்தலைவர் கலாநிதி எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் நினைவு தினமும் துஆ பிராத்தனையும் அடங்கிய "தலைவர் நினைவு தினம்" தேசிய நிகழ்வில் கட்சி கொள்கைகளை மறந்து தலைவர் அஸ்ரப் எனும் ஆளுமையை கற்க ஒன்றிணைவோம் என கேட்டுக்கொண்டுள்ளார். 

No comments

Powered by Blogger.