Header Ads



மரம் வீழ்ந்ததில் தெஹிவளை மிருககாட்சிச்சாலை பிரதான பாதுகாப்பு உத்தியோகத்தர் மரணம்


 தெஹிவளை மிருககாட்சிச்சாலையில் பணியாற்றும் பிரதான பாதுகாப்பு உத்தியோகத்தர் மரம் முறிந்து வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.


இன்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 54 வயதான உபுல் செனரத் மரகண்டா என்ற பிரதான பாதுகாப்பு அதிகாரியே உயிரிழந்தவராவார்.


மிருகக்காட்சிசாலையின் பிரதான வீதிக்கு அருகில் உள்ள கால்நடை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பாரிய மரம் வேரோடு சாய்ந்து மின்கம்பிகள் இணைக்கப்பட்டிருந்த கம்பத்தில் மோதியுள்ளது.


இதன்போது மதிய உணவை எடுத்து வந்த பிரதான பாதுகாப்பு அதிகாரி மீது மின்கம்பம் தலையில் மோதியுள்ளது.இதனால் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று மாலை 5.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.


No comments

Powered by Blogger.