Header Ads



ஆசிரியையின் மனிதாபிமானச் செயல்


தென்னிலங்கையில் பாடசாலை ஆசிரியை ஒருவரின் செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பாடசாலை மாணவர்களை வெளியில் சுற்றுலா அழைத்துசெல்வது வழமை.


பல்வேறு விடயங்களை மாணவர்கள் அறிந்துகொள்வதற்காக கல்விச்சுற்றுலாக்கள் அழைத்து செல்லப்படுகின்றன.


அந்தவகையில் தென்னிலங்கை பாடசாலை ஆசிரியை ஒருவரின் செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மாணவர்களுடன் சென்ற அந்த ஆசிரியை பிள்ளைகளின் தலையில் வெய்யில் படாமல் இருப்பதற்காக தனது சேலைத் தலைப்பால்  அவர்களை மூடி அழைத்துசெல்கின்றார்.


கோழிகள் தங்கள் குஞ்சுகளை சிறகுள்ள மறைத்து காப்பது போல மழை வெய்யில் காலங்களில் பொதுவாக அம்மாக்களே இவ்வாறு பிள்ளைகளை அழைது செல்வதனை நாம் கண்டிருக்கின்றோம்.


இந்நிலையில் ஆசியை ஒருவர் இவ்வாறு மாணவர்களை தனது சேலைத் தலைப்பால் மூடி அழைத்துசென்ற சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.         

1 comment:

  1. இது தான் எங்கள் கலாசாரம். அந்த குழந்தைகள் நிச்சியம் வெய்யிலின் அகோரத்தால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். கற்பிக்கும் ஆசிரியை அந்த குழந்தைகளுக்கு அன்பையும் பாசத்தையும் ஊட்டிக் கல்வியைக் கொடுக்கும் போது அந்த குழந்தைகள் மிகச் சிறந்த அவர்களின் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பிரயோசனமான பிள்ளைகளாக உருவாகுவார்கள். தன்பிள்ளைகளை அரவணைப்பது போல மாற்றார் பிள்ளைகளையும் அரவணைத்து அன்புசெலுத்தி கல்வியை ஊட்டும் ஆசிரியர்கள், ஆசிரியைகளாக இந்த நாட்டின் ஆசிரிய வழிகாட்டிகள் மாற்றமடையும் போது இந்த நாடும் முன்னேற்றப் பாதையை நோக்கி நகரும்.

    ReplyDelete

Powered by Blogger.