எப்போதும் பிக்குகளுடனே இருக்கும் பன்றிக் குட்டி
இரத்தினபுரி, அமாசாந்தி ஆரண்ய சேனாசனத்தில் வளர்ந்து வரும் பன்றிக்குட்டி தொடர்பில் சுவாரஸ்யமான செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த பன்றிக்குட்டி சில மாதங்களுக்கு முன் கோவிலுக்கு அருகில் வந்துள்ளது. காட்டில் கைவிடப்பட்டிருந்த குட்டிப்பன்றியை எடுத்துச் சென்று வளர்த்த ஒருவர் இதனை இங்கு ஒப்படைத்தார். இங்கு வளர்ந்து வரும் இப்பன்றிக்குட்டி எப்போதும் சத்துக்களுடனேயே இருக்கிறது. விகாரையினுள் வந்து போதனைகளை விரும்பிக்கேட்கிறது.
இப்பகுதியில் எவ்வளவு பன்றிகள் இருந்தாலும் இது அவற்றுடன் சேர்வதில்லை. எப்பொழுதும் சாதுக்களுடன் உடன் இருக்க விரும்புவதாகவும் போதனைகளை கேட்பதகவும் அங்குள்ள சாதுக்கள் கூறுகிறார்கள்.
it is with right people
ReplyDelete