அமைச்சரவையின் மிகக் கொடுமையான தீர்மானம்
இந்த அறிவித்தலை இன்றைய தினம் (04-08-2023) ஜனாதிபதி அமைச்சருக்கு வழங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கடந்த அமைச்சரவைக் கலந்துரையாடப்பட்ட விடயங்களை ஊடகங்களுக்கு பகிரங்மாக அறித்ததன் காரணமாகவே அமைச்சர் ரொஷான் ரணசிங்க மீது இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையை கருத்திற் கொண்டு நீர்த்தேக்கங்களில் இருந்து பயிர்ச்செய்கைக்காக நீரை விடுவதில்லை என எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் விவசாயியின் மகன் என்ற வகையில் தாம் அதிர்ச்சியடைவதாகவும், தண்ணீர் திறக்கப்படாததால், பல விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டு, இலட்சக்கணக்கான ரூபாய் நட்டம் ஏற்படுமெனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. JV
மேலதிகத் தகவல்
Siva Ramasamy
என்னவோ நடக்குது மர்மமா இருக்குது..!
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையை கருத்திற் கொண்டு, நீர்த்தேக்கங்களில் இருந்து பயிர்ச்செய்கைக்காக நீரை விடுவதில்லை என அரசால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் திறக்கப்படாததால், பல விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டு, பெருமளவு நட்டம் ஏற்படுமென விவசாயிகள் சொல்கின்றனர்.
கோட்டாவுக்கு இரசாயன உரத் தடை கயிறு கொடுத்த யாரோ இப்போது விவசாயிகளுக்கு நீரைத் திறந்துவிடவேண்டாம் என்ற கயிறை ரணிலுக்கு கொடுத்துள்ளனர் போலும்..
ரணிலோடு உள்ளே இருக்கும் பல கிராமத்து சீனியர்ஸ் இப்போது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
அடுத்த வாரம் விவசாயிகள் கொழும்பை முற்றுகையிடலாம்.. அவர்களை துப்பாக்கியால் சுட முடியாது.. விரட்டியடிக்க முடியாது.. அப்படியே அசம்பாவிதம் ஏதும் நடந்தால் ரணில் ஆட்சியின் கதை கந்தலாகிவிடும்..
මොකද් ද මඡාන් මේ කරන්න යන්නේ, රටේ තත්වයනන් ඉතාමත් බයානකයි.
ReplyDelete