பழைய பகைமையை மறந்து, தாய்வீடு திரும்புமாறு அழைப்பு
“எமது நாடு கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது. அது பொருளாதார, அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் நிறைந்ததாக உள்ளாது.
கடந்த சில வருடங்களுடன் ஒப்பிடுகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த ஆண்டு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழலை மாற்றியமைத்து, மக்கள் நிம்மதியாக சுவாசிக்கக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளார்.
நாடு இருந்ததைவிட சிறப்பாக இருந்தாலும், மக்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிட்டதாக கூற முடியாது. மக்கள் மிகவும் கடினமான சூழலிலேயே வாழ்கின்றனர்.
2048ஆம் ஆண்டாகும் போது புதிய வளர்ந்த நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்தில், அடுத்த சில ஆண்டுகளில் மக்களின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
வளர்ந்த நாட்டைக் கட்டியெழுப்புக அரசியல் வேறுபாடுகள் இன்றி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.
கட்சியை விட்டு வெளியேறிய உறுப்பினர்கள் குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொண்டவர்கள் மீண்டும் தாய் வீட்டுக்கு திரும்ப வேண்டும். ஹரீன், மனுஷா மற்றும் ஹாரிசன் போன்றோர் வழியில் ஏனையவர்களும் ஐ.தே.கவுக்கு மீண்டும் திரும்ப வேண்டும்.
ரணிலால் ஜனாதிபதியாக முடியாது என்பதுதான் பலருக்கு இருந்த பிரச்சினை. ஐக்கிய தேசியக் கட்சி ஒரு சதித்திட்டத்தின் மூலம் பிளவுபட்டது. இதற்கு முன்னாள் ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும். இன்று அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். எனவே பழைய முரண்பாடுகளை மறந்து நாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் பொருளாதாரத்தை எப்போதும் காப்பாற்றிய கட்சியாகும். மேலும் அனைத்து மதங்களையும் இன மக்களையும் சமமாக நடத்தும் கட்சி. இந்நாட்டில் இனம், மதம், சாதி வேறுபாடின்றி நகர்ப்புற, கிராமப்புற சமூகங்களை ஐக்கிய தேசியக் கட்சியால் மட்டுமே ஒன்றிணைக்க முடியும்“ என்றும் அவர் கூறியுள்ளார்.
ரவி கருணாநாயக்கா என்ற நபருக்கு கோடிக்கணக்கில் வரும் பணம் எங்கிருந்து வருகின்றது எனக் கேட்டால் அது அவருக்குத் தெரியாது. இது போன்ற நபர்கள் ஊடாக கட்சி புணர்நிர்மாணம் செய்யப்பட்டால் இலங்கையின் அனைத்து வாக்காளர்களுக்கும் දෙවි පිහිටයි.
ReplyDelete