Header Ads



ஊடகத் தொகுப்பாளர் திடீர் மரணம்


மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் இணையத் தொகுப்பாளர் ஜெகநாதன் டிரோன் தனது 27ஆவது வயதில் மடுவில் காலமானார்.


கடமை நிமித்தம் மடுத் திருவிழாவுக்குச் சென்ற நிலையில், நேற்று (13.08.2023) இரவு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மடு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


உயிரிழப்பிற்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை.


தற்போது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.