Header Ads



தோண்டி எடுக்­கப்­படும் ஜனா­ஸாக்கள் பில்லி, சூனியம், செய்வினைகளுக்கு பயன்படுத்தப்படுகிறதா..?


தென் மாகா­ணத்தில் மாத்­தறை மாவட்­டத்தில் முஸ்லிம் கிரா­மம் ஒன்றில் மைய­வா­டியில் அடக்கம் செய்­யப்­படும் ஜனா­ஸாக்கள் சில­வற்றின் மண்­டை­யோடு, எலும்­புகள் முத­லான உடற்­பா­கங்கள் மர்­ம­மான முறையில் தோண்டி எடுக்­கப்­பட்டு அகற்­றப்­பட்டு வரு­கின்ற சம்­ப­வங்கள் தொடர்பில் நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்­து­மாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம், தென்­மா­காண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெத­வத்­த­விற்கு அறி­வித்­துள்ளார்.


மாத்­த­றை­ மா­வட்­டத்தில் மாலிம்­மட பொலிஸ் பிரி­வி­லுள்ள பழமை வாய்ந்த குக்­கி­ரா­மங்­களில் ஒன்­றான, தெலிஜ்­ஜ­வில ,ஹொர­கொ­டவில் ஏறத்­தாழ150 முஸ்லிம் குடும்­பங்கள் வசித்து வரு­கின்­றன. மீரான் ஜும்ஆ பள்­ளி­வாசல் அங்­குள்­ளது. அங்­கி­ருந்து சற்று தொலை­வி­லேயே பிரஸ்­தாப முஸ்லிம் மைய­வாடி அமைந்­துள்­ளது. அத­ன­ரு­கிலும் சில முஸ்லிம் குடும்­பங்கள் வசிப்­ப­தோடு, ஆள் நட­மாட்­டமும் அங்கு குறை­வா­கவே காணப்­ப­டு­கி­றது.


இந்த விவ­காரம் தொடர்பில், ஹக்கீம், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅ­தி­ப­ருக்கு கடி­த­மொன்றை எழு­தி­யுள்ளார்.


அதில் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது, இது சம்­பந்­த­மாக ,பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் 2023.06.08 ஆம் திகதி 3265 ஆம் இலக்க கேள்வி க்கு பாரா­ளு­மன்­றத்தில் பதி­ல­ளிக்கும் பொழுது இவ்­வா­றான சம்­ப­வங்கள் நடை­பெ­று­வதை ஏற்றுக் கொண்­டுள்­ள­தோடு , அதனை தடுப்­ப­தற்­கான வழி­மு­றை­க­ளையும் தெரி­வித்­துள்ளார் .


பின்­னரும், சில சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. 2023.07.03 ஆம் திகதி அல்­லது அது அண்­மித்த நாளில் இந்த முஸ்லிம் மைய­வா­டி­யி­லி­ருந்து 16 மாதங்­க­ளுக்கு முன்னர் அடக்கம் செய்­யப்­பட்ட ஒரு வயோ­திப மாதுவின் மண்­டை­யோடு அகற்­றப்­பட்டு இருக்­கி­றது. அவ்­வாறே, மூன்று மாதங்­க­ளுக்கு முன்னர் அடக்கம் செய்­யப்­பட்ட 72 வய­தான ஜெலீல் என்­ப­வ­ரது ஜனா­ஸாவை அகற்றும் முயற்­சியும் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.அது பற்றி மாலிம்­மட பொலிஸ் நிலை­யத்தில்1923.07 .06 ஆம் திக­திய CIB(2)10/25 என்ற முறைப்­பாட்டில் பதிவு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது.


இதன் பின்­ன­ணியில் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கைகள் பற்றி எனக்கு அறி­யப்­ப­டுத்­துங்கள் என்­றுள்­ளது.


இக் கடி­தத்தின் பிர­திகள் பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ருக்கும், ஹொர­கொட மீரான் ஜும்ஆ பள்­ளி­வாசல் தலை­வ­ருக்கும், முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் எம்.வை.எம். ஹில்­மிக்கும் அனுப்­பி­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ஹக்கீம் தற்­பொ­ழுது வெளி­நாடு சென்­றுள்ள நிலையில், கட்­சியின் மாத்­தறை மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்­பி­னரும்,முஸ்லிம் காங்­கிரஸ் உயர்­பீட உறுப்­பி­ன­ரு­மான எம் .வை. எம். ஹில்­மி­யை­ தொ­டர்பு கொண்ட போது, இது பற்றி ஆராய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபர் ஒரு கூட்­டத்தைக் கூட்டியிருந்­த­தா­கவும், அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை அவர் மேற்­கொண்டு வரு­வ­தாக நம்­பு­வ­தா­கவும் கூறினார்.


ஏன் இவ்­வாறு ஜனா­ஸாக்­களின் உடற்பாகங்கள் களவாக அகற்றப்படுகின்றன ?என்று கேட்டபோது ,பொதுவாக பில்லி, சூனியம் போன்ற செய்வினைகளுக்கு இவ்வாறான உடற்பாகங்கள் பயன்படுத்தப்படுவதாக நம்பப்படுவதாகவும், சில வேளைகளில் அவை மருத்துவம் கற்கும் மாணவர்களுக்கு விற்கப்படுவதாக எண்ணுவதாகவும் கூறினார்.- Vidivelli

No comments

Powered by Blogger.