Header Ads



அரசாங்கத்திடம் நாமல் கேள்வி - சஜித்தையும், அநுரகுமாரவையும் களத்தில் குதிக்குமாறு வேண்டுகோள்



வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தண்ணீருக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கும் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் நிலைப்பாடு மற்றும் வேலைத்திட்டம் குறித்து அறிவிக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


பிங்கிரிய பிரதேச சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,


வறட்சியினால் விவசாயிகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தென் மாகாணம், கிழக்கு, வடமத்திய, வடமேற்கு விவசாயிகள் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள விவசாயிகள் இந்த வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணம் குறித்து ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையிடம் நேரடியாகக் கேட்க விரும்புகின்றோம்.


மேலும் காலநிலை மாற்ற மாநாட்டில் ஜனாதிபதி கலந்து கொண்டார்.அந்த மாநாட்டில் உள்ள நாடுகளுடன் நல்லுறவைக் கொண்டுள்ளோம்.தற்போது அந்த நாடுகளிடம் இருந்து எவ்வாறான உதவிகளை பெறமுடியும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


அதேபோன்று நான் எதிர்க்கட்சித் தலைவருக்கும் தோழர் அநுர திஸாநாயக்கவுக்கும் கூறுகின்றேன், இந்தப் பிரச்சினையை விமர்சனமின்றி எதிர்கொள்ள நடைமுறை மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை நாம் மேற்கொள்ள வேண்டும். எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நீர் மேலாண்மை, மின் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் அறுவடையை வெற்றிகரமாகச் செய்ய நடைமுறைத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்றார் .

1 comment:

  1. முதலில் உமது பிக் அன்கலிடம் சொல், உடனடியாக பொதுத் தேர்தலை வைக்குமாறு, அவ்வாறு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் மழை பொழியும். பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். அது தவிர அங்குமிங்கும் வம்பளந்து மோடக் கைவாறை விட்டுவி்ட்டு வேலையைப்பாரும்.

    ReplyDelete

Powered by Blogger.