பாரதீய ஜனதா கட்சியில் முஸ்லிம்கள் சேர்ப்பு, தேர்தலுக்காக புது வடிவம்
பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன், தான் 'மூன்றாவது முறை பிரதமராவது' பற்றி பேசியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பாரதிய ஜனதா கட்சி தனது தேசிய செயற்குழுவை அறிவித்தது.
அதில் பல புதிய முகங்கள் இடம் பெற்றிருந்தனர்.
ரமன் சிங் போன்ற முன்னாள் முதல்வர்கள் கட்சியின் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் தாரிக் மன்சூர் மற்றும் அப்துல்லா குட்டி ஆகியோர் பாஜகவின் புதிய முஸ்லிம் முகங்களாக பார்க்கப்படுகிறார்கள்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையும், இந்த ஆண்டு நடக்க உள்ள நான்கு மநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்களையும் மனதில் வைத்தே, பா.ஜ.க.வின் செயற்குழுவில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்ற கருத்துகளும் எழுந்துள்ளன.
பா.ஜ.க.வின் சித்தாந்தம் மற்றும் கடந்த ஒன்பது ஆண்டுகால மோடி அரசின் செயல்பாடுகளின் மூலம் தேர்தலில் அதிகபட்ச இடங்களைப் பெற முடியும் என்பதை மனதில் வைத்தே தேசியச் செயற்குழுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் கூறுகிறார்.
Post a Comment