Header Ads



கனடாவுக்கு செல்ல விரும்புபவர்களே அவதானமாக செயற்படுங்கள்


கனடாவில் கல்வி கற்பதற்கு தயாராக இருந்த இந்திய மாணவர்கள் சிலருக்கு கனடாவிலுள்ள கல்லூரி ஒன்று ஏமாற்றமளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கனடாவில் கல்வி கற்பதற்காக தயாராகியிருந்த இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் கனடாவின் Scarborough வில் உள்ள Northern College எனும் கல்லூரியில் பயில்வதற்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருந்துள்ளனர்.


அடுத்த மாதத்தில் வகுப்புகள் ஆரம்பிக்க இருக்கும் நிலையில், திடீரென அவர்களுடைய விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கல்லூரி நிர்வாகம் தகவல் அனுப்பியுள்ளது.


காத்திருந்த மாணவர்களில் பலர் விமான டிக்கெட்டுகளை வாங்கிவிட்டு, தங்குமிடத்துக்கும் பணம் செலுத்தியுள்ளனர்.


கனடாவிலுள்ள கல்லூரிகள் பல வருவாய்க்காக உள்ளூர் மாணவர்களைவிட வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றன.


கனடாவில் கல்வி கற்க காத்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றம்: அம்பலமாகும் புதிய மோசடி | Disappointment For Indian Students By Canada


அத்துடன், விண்ணப்பிக்கும் எல்லா மாணவர்களுக்கும் விசா கிடைக்கப்போவதில்லை என கல்லூரி நிர்வாகம் அறிந்திருப்பதால் இது போன்ற கல்லூரிகள் கல்லூரியில் இருக்கும் இடங்களை விட அதிக விண்ணப்பப் படிவங்களை விநியோகிக்கின்றன.


இதனால் இருக்கைகளை மிஞ்சிய விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றமையால் அந்த மாணவர்களின் விண்ணப்பங்களை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுகின்றன.


எனினும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முழு கல்விக்கட்டணத்தையும் திருப்பித் தருவதாகவும், அல்லதுவேறு கல்லூரிகளிலிருந்து அனுமதி கடிதங்கள் பெற்றுத்தருவதாகவும், இந்தக் கல்லூரியில் மாணவர்கள் கட்டியுள்ள கல்விக் கட்டணத்தை அந்தக் கல்லூரிகளுக்கு செலுத்திவிடுவதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


இருப்பினும் இந்த விடயங்களில் எந்தளவிற்கு உண்மைத்தன்மை உள்ளது என்பது சந்தேகமே.

No comments

Powered by Blogger.