காணாமல் போன மாணவி
மெதகமவில் தனியார் வகுப்பிற்கு சென்ற தனது மகளை காணவில்லையென தாய் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெதகம நன்னபுரவ தியகோபால பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மெதகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதற்காக வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை என தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மெதகம காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment