ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்..
ஒரு குருவிக் கூட்டில் இறந்து கிடக்கும் குஞ்சுப் பறவைகள்தான் இவைகள்!!!!!!
தீனி வரும் வரும் என்று எதிர்பார்த்து இருந்திருக்கலாம். ஆனால் தீனி தேடிச் சென்ற தாய்க் குருவி ஏதாவது ஒரு தீய சக்தியால் சாகடிக்கப்பட்டிருக்கலாம்!
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்!
நீங்கள் ஒருவரின் சம்பளத்தை வழங்காமல் இருக்கும் போதெல்லாம் அவரது குடுபத்தவர்களையும் பசியில் போடுகிறீர்கள்.
நீங்கள் ஒருவரின் உரிமையை அபகரிக்கும் போதெல்லாம் அவர் குடும்பத்தின் உரிமையையும் அபகரிக்கிறீர்கள்.
நீங்கள் ஒருவரை மானபங்கப்படுத்தும் போதெல்லாம் அவரது மொத்த குடும்ப உறுப்பினர்களையும் மானபங்கப்படுத்தி விடுகிறீர்கள்.
வாழும் போது நம்மை சூழவுள்ள
மனிதர்களுக்கும், மற்ற உயிருள்ள ஜீவன்களுக்கும் தொந்தரவுகள் கொடுக்காமல் வாழப் பழகுங்கள்!
அநியாயங்கள் அந்த நாளில் அந்தகாரமாகவே இருக்கும்!
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment