ஜனாஸாக்களை எரித்தமை பற்றி, ஏன் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறீர்கள் இல்லை..?
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது சுகாதார அமைச்சரிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவிக்கையில்,
“ கொரேனா தொற்று காலப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் விடயத்தில் உலக சுகாதார தாபனத்தின் வழிகாட்டல்களை தவிர்த்து உங்களின் சொந்த முறைகளின் கீழேயே அதனை செய்துள்ளீர்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளக விசாரணை தொடர்பில் கூறியிருந்தீர்கள்.
மஹிந்த ராஜபக்ஷவும் இது தொடர்பான பரிசீனை செய்வதாக தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் இது தொடர்பான விடயம் வெறுப்புணர்வு குற்றச் செயலாகும். இதற்கு ஏன் பகிரங்கமாக மன்னிப்பு கோர முடியாது” என்றார்.
இதன்போது பதிலளித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, “நிபுணர்கள் குழுவின் வழிகாட்டல்களை அடிப்படையாகக் கொண்டே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கின்றேன். உங்களின் வேண்டுகோள் தொடர்பில் அந்த குழுவின் அறிக்கையை முன்வைப்பேன். இதனை உணர்வுபூர்வமான விடயமாக கருதி சட்ட தன்மை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்கின்றேன்” என்றார்.
கெஹலிய ரபுக்வெல்லயின் நிபுணர்கள் குழு தான் இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தைக் கிழித்த அந்த கவலையும் சோகமும் நிரம்பிய அந்த இனவாதமும், முஸ்லிம்களின் மீது அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட வெறுப்பும் குரோதமும் சேர்த்து உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்புரைத் துச்சமாக மதித்து, அதற்கு எதிராக கோவிட் காலத்தில் மரணித்த நூற்றுக்கணக்காக முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தீயிட்டுக் கொழுத்தி, மின்சாரம் பாய்ச்சி சாம்பலாக மாற்றிய அந்த பெரும்பாவத்துக்கு இந்த கீழ்சாதி நிபுணர்களின் மன்னி்பபும், சுகாதார அமைச்சர் கெஹலியவின் பகிரங்க மன்னிப்பும் எமக்குத் தேவையில்லை. அப்படி மன்னிப்புக் கேட்பதாக இருந்தால் இந்தப் பூமியில் வாழும் 2 பில்லியன் முஸ்லிம்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும், அவர்களில் ஒருவரேனும மன்னிக்காவிட்டால் அந்த மன்னிப்பு செல்லுபடியாகாது. வௌிநாட்டு அமைச்சர் அலிசப்ரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோடான கோடி டொலர்கள் கொண்டுவர உத்தியோகபூர்வமாக சவூதி அரேபியா சென்ற போது கெபினட் அமைச்சர்கள் ஒருவரேனும் அலிசப்ரியுடன் கதைக்க விரும்பவில்லை. உம்முடைய பொஸ்ஸும் நீரும் சேர்ந்து தான் எங்கள் ஜனாஸாக்களை எரித்து சாம்பலாக்கினீர். உமக்கு இங்கு வரவேற்பு இல்லை என பகிரங்கமாக சவூதி அரேபியாவும், கதாரும் தெரிவித்துள்ளன. வேறு எந்த அரபு நாட்டுக்குச் சென்றாலும் அதே பதில்தான் கிடைக்கும். இனி ராஜபக்சாக்களின் யார் ஆட்சிக்கு வந்தாலும் அரபு நாடுகள் இலங்கையைத் திரும்பிப் பார்ப்பது கிடையாது. இதுதான் யதார்த்தம். அந் த கொள்கையிலிருந்து அரபு நாடுகள் ஒரு அங்குலமும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. ரவூப் ஹகீம் பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு என பேசும் அரசியல் பற்றி உலக முஸ்லிம்கள் அனைவரும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர்.
ReplyDelete