Header Ads



சபாநாயகர் மீது குற்றச்சாட்டு


சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முகவர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (11.08.2023) இது குறித்து கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,


அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் நீதித்துறைக்கு தீர்ப்பு வழங்க முடியாது என சபாநாயகர் தீர்மானித்துள்ளார். 


இதன் மூலம் நாடாளுமன்றம் எடுக்கும் எந்த முடிவையும் நீதித்துறை கேள்வி கேட்க முடியாது என்ற தோற்றத்தை சபாநாயகர் ஏற்படுத்தியிருப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.


மேலும் முன்னதாக இந்த விடயம் தொடர்பில் குற்றச்சாட்டை முன்வைத்த ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க, சபாநாயகர், அரசாங்க நிர்வாகியை சந்தோஷப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.