Header Ads



பௌத்த தேரர்கள் பலர் போர்க்கொடி


அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படக் கூடாதென மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். 


இந்தச் சட்டத்தின் நடைமுறை இலங்கையை பிளவுபடுத்தும் நடவடிக்கை எனவும் இதனடிப்படையில் குறித்த சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த  அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டுமென அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்திருந்தார். 


இந்த நிலையில், கடந்த 1987 ஆம் ஆண்டு இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதனை எதிர்த்த தரப்பினர் தற்போது அமைதி காப்பதாக ஓமாரே கஸ்ஸப்ப தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.  


இதன்படி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன கடந்த காலங்களில் குறித்த சட்டத்தை எதிர்த்ததாகவும் தற்போது அதற்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


அத்துடன், இந்தச் சட்டத்தின் நடைமுறையை நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் எதிர்க்க வேண்டுமென ஓமாரே கஸ்ஸப்ப தேரர் வலியுறுத்தியுள்ளார்.


இதேவேளை, இலங்கையை இரண்டாக பிரிக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் எந்தக் காரணத்துக்காகவும் நடைமுறைப்படுத்தப்படக் கூடாதென இதுராகாரே தம்மரத்தன தேரர் தெரிவித்துள்ளார். 


இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த  அதிபர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் தமது எதிர்ப்புக்களை வெளியிட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

No comments

Powered by Blogger.