ரணில் என்ற தலைவரை வீழ்த்த முடியாது
மூவின மக்களின் அமோக வாக்குகளால் ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதி கதிரையில் அமர்வது உறுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சஜித் பிரேமதாச தம்பட்டம் அடிப்பதாலோ அல்லது நாமல் ராஜபக்ச மேடையில் முழங்குவதாலோ அல்லது அநுரகுமார திசாநாயக்க போராட்டக்காரர்களைத் தூண்டுவதாலோ ரணில் விக்ரமசிங்க என்ற பெருந்தலைவரை வீழ்த்த முடியாது.
தற்போது ஜனாதிபதி பதவியில் இருக்கும் ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் நாட்டுக்கான சேவையைத் திறம்படச் செய்து வருகின்றார்.
மூவின மக்களும் அவர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவர் அடுத்த தடவையும் ஜனாதிபதி கதிரையில் அமர்ந்து, நாட்டு மக்களுக்கு முழு மூச்சுடன் பணியாற்றுவார் என தெரிவித்துள்ளார்.
எந்த இலக்கும், ஆட்சிபற்றிய எந்தப் பிரக்ஞையும் அற்ற இந்த மந்தியும் வால் பிடிக்கத் தொடங்கிவிட்டான். அரசியலில் எந்த பயனுமற்ற இந்த புல்லுருவிகளை துரட்சி பண்ண பொதுமக்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ReplyDelete