செத்த நீரும், மட்பாண்ட நீரும் - ஆச்சரியம் தரும் ஆய்வு முடிவுகள்
மேலும் மட்பாண்ட ஜாடிகளில் தண்ணீரை சேமித்து வைப்பதனால் அது உயிர்புள்ள தண்ணீராக மாற்றமடைந்து, அதன் சத்துக்களையும் மீட்டெடுக்க ஏதுவாகி விடுவதாகவும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன.
மட்பாண்டங்களுக்கும் மனித உடலுக்கு மிக நெருக்கமான ஒற்றுமைகள் இருப்பதால் ஜாடிகளில் பாதுகாக்கப்படும் தண்ணீர்தான் மிகவும் ஆரோக்கியமான தண்ணீர் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆரம்பத்தில் தண்ணீர் தண்ணீரின் அசல் வடிவத்தில் தான் இருந்ததாகவும், பின்னர் காலப்போக்கில் மனித செயற்பாடுகளால் தண்ணீர் அதன் அடிப்படை கூறுகளை படிப்படியாக இழந்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். விஞ்ஞானிகள் இந்த சீரற்ற நீரை இறந்த நீர் என்றும், சீரான நீரை உயிர்ப்புள்ள நீர் என்றும் அழைக்கின்றனர்.
மட்பாண்டங்களில் சேமிக்கப்டும் தண்ணீரில் அதன் சத்துக்களும், அணுக்களும் மீண்டும் மீள் உருவாக்ப்படுவதால் மனித உடலுக்கும் தாவரங்களின் வளர்ச்சிக்கும் பின்வரும் பலன்கள் கிடைப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
⚱பூமி போன்றே மட்பாண்டங்களும் எதிர்மின்னேற்றத்தை கொண்டவை.
இத்தகைய மின்னேற்றம் தண்ணீரில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களைக் கொல்லும் திறன் கொண்டது. அதாவது மட்பாண்டமானது அசுத்தங்களிலிருந்து தண்ணீரைச் சுத்திகரிக்கிறது, பெரும்பாலான தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் நேர்மறை மின்னேற்றம் கொண்டவையாகும்.
⚱மட்பாண்ட ஜாடியில் தண்ணீரை நாம் சேமிக்கும் போது, அது காரத்தன்மையாக மாறும், அதாவது ph 7.5 ஆக மாறும். மேலும் ஜாடியில் தண்ணீர் இருக்கும் அளவுக்கு அது 9. 8 ph கூடும்.
⚱நாம் மட்பாண்ட ஜாடியிலிருந்து தண்ணீரைக் பருகிவரும்போது, காரத்தன்மையான தண்ணீரையே குடிக்கிறோம், நமது இரத்தத்தின் pH காரத்தன்மை கொண்டது, இதனால் புற்றுநோயின் வளர்ச்சி தடைப்படுகிறது.
புற்றுநோய் செல்கள் காரத்தன்மை சூழலில் பெருகாது. மேலும் மற்ற மற்ற தொற்று நோய் பரவல்களையும் தடுத்துவிடுகிறது.
⚱மட்பாண்ட குடுவையில் சேமிக்கப்பட்ட தண்ணீர் காரத்தன்மையுடையதாக மாறுகிறது, இதன் பொருள் பிளாஸ்டிக்கில் உள்ள தண்ணீரை விட 200 மடங்கு அதிக ஆக்ஸிஜன் அதில் உள்ளது. நாம் குடுவையிலிருந்து தண்ணீரைக் குடிக்கும்போது, ஆக்சிஜன் நம் உடல் முழுவதையும் சென்றடைந்து, புற்றுநோய், மற்றும் நோய்த்தொற்றுகளை உருவாக்கும் அனைத்து காற்றில்லா செல்களையும் அழித்துவிகிறது. ஏனெனில் அந்த செல்களும் ஆக்ஸிஜனோடு இணைந்து வாழ விரும்புவதில்லை.
⚱சாதாரண நீரில் உள்ள உப்பின் சதவீதத்தை விட பானை ஜாடி நீரில் உப்பின் சதவீதம் எப்போதும் குறைவாகவே இருக்கும்.
குறிப்பு:
தண்ணீர் சேமிக்கபடும் மட்பாண்ட குடுவை (ஈரப்பதமானதாக) இருப்பது அவசியமாகும், அதாவது வர்ணம் பூசப்படாது, தண்ணீர் கசியும்படியாக இடைவெளிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். மேலும் அது இரசாயனம் கலக்கப்பட்டாத தயாரிப்பாக இருத்தல் வேண்டும். அதாவது அது இயற்கையான களிமண் தயாரிப்பாக இருக்க வேண்டும்.
இறைவன் மனிதனை களிமண்ணால் படைத்தான் என்பது நாம் அறிந்த விடயம். களிமண் இயல்பாக வாழ்வியல் கூறுகளை பாதுகாக்கும் அற்புதமான திறனை கொண்டுள்ளது.
அதனால்தான் நம் முன்னோர்கள் தண்ணீர், எண்ணெய் மற்றும் காய்த்த இறைச்சிகளை மட்பாண்ட ஜாடிகளில் சேமித்து வைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.
அவர்கள் ஆரோக்கியம் அளிக்கும் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள்.
நாம் தீங்கிழைக்கும் ப்ளாஸ்டிகளோடு இணைந்து வாழ பழகிவிட்டோம்.
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment