மீண்டும் ஒரு அரகலய..? ஜனாதிபதிக்கு சென்ற இரகசிய அறிக்கை
இந்த போராட்ட அலையை உருவாக்கும் சதியின் பின்னணியில் முந்தைய போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர் இருப்பதாக உளவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இறுதியாக, நாட்டின் பொருளாதார வேலைத்திட்டத்தை சீர்குலைப்பதே இதன் பின்னணியில் உள்ள சக்திகளின் முக்கிய நோக்கம் என்பதை புலனாய்வு அமைப்புகள் காட்டியுள்ளன.
இந்த சதியின் பின்னணியில் உள்ள குழுக்கள் யார் என்பதை புலனாய்வு அமைப்புகள் விரிவாக சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வு அமைப்புகள் பல ஊடக நிறுவனங்களின் பெயரையும் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த ஊடக நிறுவனங்கள் மக்களைத் தூண்டும் வகையில் ஊடக அறிக்கைகளை வெளியிடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி மற்றும் தமிழ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும், உறுப்பினர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக புலனாய்வு அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு தண்ணீர் தருவதில்லை என்றும், இதனால் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்றும் கூறி விவசாயிகளை விதிக்கு இறக்கி அதன் மூலம் அரசியல் அதிர்வலைகளை உருவாக்கும் திட்டம் திட்டப்பட்டுள்ளதாக புலனாய்வுத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.
– லங்காதீப -
Post a Comment