Header Ads



இவற்றை அறிந்து கொள்ளுங்கள், நீர் கட்டண அதிகரிப்பை குறைத்துக் கொள்ளுங்கள்


ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் நீர் கட்டணத்தை  அதிகரிப்பதற்கான  வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 


சமுர்த்தி பயனாளிகள் மற்றும் தோட்டக் குடியிருப்புகளுக்கான நீர்  கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. ஏனைய பிரிவுகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


1 முதல் 5 வரையான அலகுகளை பயன்படுத்தும் வீடுகளுக்கு இதற்கு முன்னர் இருந்த 20 ரூபா கட்டணம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது  200% அதிகரிப்பாகும். 


6 முதல் 10 அலகுகளுக்கான கட்டணம் 27 ரூபா முதல் 80 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 11 முதல் 15 அலகுகளை பயன்படுத்தும் ஒவ்வொரு அலகுக்கும் 66 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


 0 முதல் 15 வரையான அலகுகளுக்காக அறிவிடப்பட்ட 300 ரூபா சேவைக் கட்டணத்தில்  மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை. 


16 முதல் 20 வீதம் வரையான ஒவ்வொரு அலகுக்கும் 42 ரூபாவால் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான மாதாந்த சேவைக் கட்டணமும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


வீடுகளில் 21 முதல் 25 வரையில் பயன்படுத்தும் அலகுகளுக்கு 31 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான மாதாந்த சேவைக் கட்டணம்  200 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.


26 முதல் 30 வரையான அலகுகளை பயன்படுத்துவோரின் ஒரு அலகிற்கான கட்டணம் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான மாதாந்த கட்டணம் 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. 


31 தொடக்கம் 40 வரையான நீர் அலகுக்கு ஒரு ரூபாவால் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான மாதாந்த சேவைக் கட்டணம்  600 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


41 முதல் 50 அலகுகளை பயன்படுத்தும் குடும்பமொன்றுக்கு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு அலகுக்கு 6 ரூபா அதிகமாக செலுத்த வேண்டும் என்பதுடன், அவர்களுக்கான மாதாந்த கட்டணமும் 600 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  

 

51 முதல் 75 வரையான அலகுகளுக்கு 19 ரூபா அதிகரிக்கப்படுவதுடன் சேவைக் கட்டணம் 1100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


இதற்கு முன்னர் 75-க்கும் அதிகமான அலகுகள் என காணப்பட்ட கட்டமைப்பு இம்முறை 76 இலிலிருந்து 100 என திருத்தப்பட்டுள்ளது. 

அந்த பிரிவிற்கு ஒரு அலகு நீர் கட்டணம் 32 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாதாந்த கட்டணம் 500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


நூறு அலகுகளுக்கு ​மேலாக பயன்படுத்தும் வீட்டு மின் பாவனையாளர்கள் ஒரு அலகுக்கு 300 ரூபாவை செலுத்த வேண்டும் என்பதுடன், மாதாந்த சேவைக் கட்டணம் 4500 ரூபாவை செலுத்த வேண்டும்.

 


பொது நீர் குழாய்கள் மற்றும் பூங்காங்களில் உள்ள நீர் குழாய்களுக்கான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


அந்த பிரிவுகளில் நீர் அலகு ஒன்றுக்கு அறவிடப்படும் 15 ரூபா கட்டணம் 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அது 300% அதிகரிப்பாகும். 


0 அலகிலிருந்து 25 வரையான அலகுக்கான சேவைக் கட்டணம் 300 ரூபாவிலிருந்து 400 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 


வழிபாட்டுத்தலங்கள்  மற்றும் பாடசாலைகளுக்கான ஆகக்குறைந்த நீர் கட்டணம் 900 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


5 அலகு நீரை மாதாந்தம் பயன்படுத்தும் வழிபாட்டுத்தலங்கள் அல்லது பாடசாலையொன்று அலகுகொன்றுக்கு செலுத்திய 6 ரூபா கட்டணம் புதிய திருத்தத்தின் படி 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  அதற்காக செலுத்த வேண்டிய மாதாந்த நிலையான கட்டணம் 50 ரூபாவிலிருந்து 400 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 


5 அலகுகளை மாதாந்தம் பயன்படுத்தும் சமய ஸ்தலங்கள் அல்லது பாடசாலைகளுக்கு வரியின்றி நீருக்காக செலுத்திய 80 ரூபா கட்டணம் தற்போது 700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 775 வீத அதிகரிப்பாகும். 


எனினும், வழிபாட்டுத்தலங்கள் அல்லது பாடசாலைகள் எந்தளவு நீரை பயன்படுத்தினாலும் அலகொன்றுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் 60 ரூபாவாகும்.


எனினும், மாதாந்த நிலையான கட்டணத்தை  400 ரூபாவிலிருந்து 3500 ரூபா வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


கப்பல் மற்றும் துறைமுக நகர பிரிவில் மாதாந்தம் 25 அலகுகளை பயன்படுத்தும் நிறுவனங்கள் நீருக்காக அலகொன்றுக்கு செலுத்திய 670  ரூபா கட்டணம் தற்போது 750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அது 11 வீத அதிகரிப்பாகும். இந்த பிரிவில் அனைத்து நீர் அலகுகளும் 750 ரூபாவிற்கு விற்கப்படும். 


மாதாந்த சேவைக் கட்டணம் மாத்திரம் சிறிதளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி 20,000 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் நிறுவனங்கள் இதுவரை செலுத்திய 1,20,000 ரூபா மாதாந்த கட்டணம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


நீர் பயன்பாடு தொடர்பிலும் புதிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.


வர்த்தமானி அறிவித்தலின் படி நீர் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.


நீர் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தினால் 1.5% கட்டணம் குறைவடையும். 


பட்டியல் கிடைத்து 30 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால், 2.5% மேலதிக கட்டணத்தை செலுத்த வேண்டும்.


30 நாட்களுக்கும் அதிகமாக நீர் கட்டணத்தை செலுத்தாத பாவனையாளர்களின் நீர்  விநியோகத்தை இரத்து செய்வதற்கான அதிகாரமும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. 


அனைத்து பாவனையாளர்களும் இலத்திரனியல் மின்பட்டியலை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், அவ்வாறு இல்லாவிட்டால் சுற்றாடல் பாதுகாப்பு நிதியத்திற்காக வடிகாலமைப்பு சபையின் முகாமையாளர் அறிவிக்கும் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

No comments

Powered by Blogger.