Header Ads



திருமணமான பெண் கடத்தப்பட்டார்


கதிர்காமம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் நேற்று (24) வானொன்றில் வந்த குழுவினரால் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பெரியகம பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான பெண்ணொருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.


குறித்த பெண் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிள் சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறு கடத்தப்பட்ட பெண், தனது மகனை அழைத்துச் செல்வதற்காக பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது, வானொன்றில் வந்த அடையாளம் தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இருப்பினும் கடத்தப்பட்ட பெண் குறித்து இதுவரை பொலிஸாருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.


குறித்த பெண்ணை கடத்தியமைக்கான காரணமோ அல்லது அவரை கடத்திய குழுவினர் தொடர்பிலோ இதுவரையில் தகவல் வெளியாகவில்லையெனவும்,  விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.