தனது சகோதரர் அனுப்பிய ரொக்கெட் குறித்து கருத்துக் கூறியுள்ள நாமல்
இந்தியாவின் சந்திராயன் குறித்தும் நாமல் ராஜபக்சவின் சகோதரரின் விண்வெளி முயற்சிகள் குறித்தும் முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விளக்கமளித்துள்ளார். இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
இந்தியாவின் விண்கலத்தினை தனது சகோதரர் அனுப்பிய ரொக்கெட்டுடன் தொடர்புபடுத்தி சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். நாடாளுமன்றத்திலும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
எனது சகோதரர் தனியார் துறை முயற்சியாகவே ரொக்கெட்டினை அனுப்பினார் அதில் அரசாங்கம் தொடர்புபட்டிருந்தால் மாத்திரமே அது குறித்து கோப் குழுவினர் விசாரணை செய்யவேண்டும்.
தனியார் வர்த்தகர் ஒருவரின் முதலீடு குறித்து நாங்கள் கேள்வி எழுப்ப முடியாது அதில் அரசாங்கத்திற்கு தொடர்பிருந்தால் மாத்திரம் எதிர்கட்சி தலைவர் நாடாளுமன்ற விசாரணையை கோரமுடியும்.
சேற்றை வாரிவீசும் அரசியல் சூழலை அடிப்படையாக கொண்டவை. இந்த கருத்துக்கள் இவ்வாறான கருத்துக்களால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
Post a Comment