Header Ads



இந்தியாவில் முஸ்லிம் மாணவன் மீது, ஆசிரியையின் படு பாதகச் செயல் (வீடியோ)


இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவர், முஸ்லிம் சிறுவனை மற்ற மத மாணவர்களைக் கொண்டு அடிக்க வைத்த சம்பவம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.


இது தொடர்பிலான காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.


உத்தரப்பிதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் மன்சூர்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குப்பாபூர் கிராமத்தில் உள்ளது நேஹா பப்ளிக் பள்ளி. இங்கு 2-ம் வகுப்பில் படிக்கும் முஸ்லிம் மாணவர் ஒருவரை மாற்று மதத்தை சேர்ந்த மாணவர்களை அழைத்து அடிக்குமாறு ஆசிரியை கூறியுள்ளார்.


வீடியோவில், பள்ளி ஆசிரியை ஒரு சிறுவனை வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களைக் கொண்டு அடிக்கவைக்கின்றார்.


இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து முசாபர்நகர் காவல்துறை, ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்தனர்.


இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சிங், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.     


https://fb.watch/mFUOp2tIHq/    

No comments

Powered by Blogger.