மர்ம நபர் வழங்கிய பானம் - மயங்கி விழுந்த சிறுவன்
ஹொரணை பிரதேசத்தில் பட்டம் பறக்கவிட்டுக் கொண்டிருந்த சிறுவனுக்கு ஒன்று அடையாளம் தெரியாத நபரால் வழங்கப்பட்ட ஐஸ் பானத்தை அருந்தியதால் சிறுவன் சுகவீனமடைந்துள்ளார்.
பெற்றோர் சிறுவனை ஹொரண வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சிறுவனுக்கு 12 வயது எனவும், ஹொரண பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவன் வயல்வெளியில் பட்டங்களை பறக்கவிட்டுக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஐஸ் பானத்தை அவருக்கு வழங்கியுள்ளார்.
சிறுவன் அதனை மறுத்த போதிலும், வலுக்கட்டாயமாக கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், பானத்தை குடித்த அவர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment