தாயையும், குழந்தையையும் கொலை செய்தவரின் பரிதாபமான முடிவு
அங்குருவாதொட்ட உருதுடாவ பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் அண்மையில் இளம் தாயையும் 11 மாத பெண் குழந்தையையும் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
களுத்துறை மல்வத்தை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ சிப்பாயான சந்தேகநபர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வரகாகொட சல்கஸ் வத்த மாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் பிரியன் மதுரங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் அங்குருவாதொட்ட உருதுடாவ பிரதேசத்தில் வசிப்பவராகும்.
24 வயதான வாசனா குமாரி மற்றும் 11 மாத பெண் குழந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அங்குருவாதொட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.
உயிரிழிந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment