விகாரைகள் கட்டுவதை தடுப்பவர்களின் தலைகளை சுமந்துகொண்டு களனிக்குச் செல்வேன்
நான் வடக்கு, கிழக்குக்கு வருவேன், நீங்கள் விகாரைகளை தடுக்க முற்பட்டால், மகா சங்கத்தினர்மீது கை வைக்க முயன்றால் நான் களனிக்கு சும்மா திரும்பி வரமாட்டேன், உங்களின் தலைகளை கையில் சுமந்து கொண்டுதான் களனிக்கு வருவேன்." என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமெனில் இந்நாட்டில் உள்ள கள்வர்களை பிடிக்க வேண்டும், திருடர்கள், கமிஷ்காரர்களை விரட்ட வேண்டும்." எனவும் மேர்வின் வலியுறுத்தினார்.
"நாட்டில் மின்சாரம் இல்லை, விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, நீர் கட்டணம் அதிகரித்துள்ளது. நிலைமை இப்படி இருக்க நுவரெலியாவில் ராஜபக்ச குடும்பம் கிரிக்கெட் விளையாடுகின்றது, இது விளையாடக்கூடிய நேரமா" - எனவும் மேர்வின் கேள்வி எழுப்பினார்.
இலங்கையில் அரசாங்கம் இல்லை என்பது உறுதியானதுடன் இந்த மென்டலும் களத்துக்கு இறங்கியுள்ளான். இனி பைத்தியங்கள் பலவிதம் காணலாம்.
ReplyDelete