கட்டழகி போட்டியில் வட மாகாண பெண் முதலிடம்
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற இந்த போட்டியில் வடமகாணத்தின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கு பெற்றிருந்தனர்.
வடக்கு மாகாணத்தில் இருந்து ஒரே ஒரு பெண் ஒருவர் பெண் கட்டழகி போட்டியில் பங்குபெற்று முதலாம் இடத்தினை பெற்றார்.
வவுனியா பகுதியைச் சேர்ந்த மிதுனா என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு வடமாகாணத்தில் இருந்து ஒரே ஒரு பெண்ணாக கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
வடமாகாண ஆண் அழகன் உடல் கட்டமைப்பு போட்டி 21 வயது கீழ் பிரிவின் 60 கிலோவுக்கு உட்பட்டதும், 60 கிலோவுக்கு மேற்பட்ட இரண்டு பிரிவுகளாக இடம்பெற்றது.
குறிப்பாக 50 - 55 கிலோ, 60 - 65 கிலோ. 70 - 75 80 - 85 க்கு மேல் இந்த பிரிவுகளாக இடம் பெற்றது.
மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட மாஸ்டர் பிரிவின் கீழ் ஆண் உடற்கட்டமைப்பு போட்டியும் இடம்பெற்றது.
ஆண் உடற்கட்டமைப்பு போட்டியில் யாழை பிரதிநிதித்துவப்படுத்தி இருவர் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்று சென்றனர்.
தொண்டமானாறு பகுதியை சேர்ந்த ஜெகநாதன் லக்ஸ்மன் முதலாவது இடம் இடத்தை பெற்றார்.
இரண்டாம் இடத்தை உடுப்பிட்டி தொண்டமானாறு பகுதியை சேர்ந்த குணநாதன் கஜீவன் பெற்றுக்கொண்டார் மூன்றாம் இடத்தை மன்னார் பகுதியைச் சேர்ந்த இளைஞன் பெற்றார்.
Post a Comment