Header Ads



சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்


பதுளை - எல்ல கொடுவல பகுதியில் போதைப்பொருள்  சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஐஸ் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை கைது செய்வதற்காக எல்ல பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று இன்று அதிகாலை சுற்றிவளைப்பை மேற்கொண்டது.


சுற்றிவளைப்பிற்கு சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையே  சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால்  தாக்கியுள்ளார்.


காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து  ஐஸ் போதைப்பொருள், கைக்குண்டு, கத்தி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

No comments

Powered by Blogger.