பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புத்தி, தெளிவு ஏற்பட இன்று சிறப்புப் பூஜை
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புத்தி தெளிவு ஏற்பட வேண்டும் என பிரார்த்தித்து, பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், இன்று -13- மாலை பெப்பிலியான சுனேத்ராதேவி பிரிவெனவில் பூஜை ஒன்றை நடத்தயுள்ளார்.
13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் நாட்டுக்கு ஏற்படும் ஆபத்தை புரிந்துக்கொள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புத்தி தெளிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அபயதிஸ்ஸ தேரர் இந்த பூஜையை நடத்தவுள்ளார்.
சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர, மருத்துவர் வசந்த பண்டார உட்பட பலர் இந்த பூஜையில் கலந்துக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு கொண்டு வர முக்கிய பங்காற்றியவர்களில் பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரரும் ஒருவர்.
கோட்டாபய ராஜபக்ச ஹிட்லரை போன்றவராக இருந்தாவது ஆட்சிக்கு வந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் எனவும் அபயதிஸ்ஸ தேரர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
இந்த சாமியாரின் முயற்சி ஒரு நல்ல ஏற்பாடாக இருக்கும். ஆனால் இந்த பூஜையில் சிலவேளை எருமைமாடுகளுக்கு சிலவேளை புத்தி வரலாம். ஆனால் அந்த தியவன்னாவையில் உள்ள 225 மீஹரக்குகளுக்கு புத்தி தௌிவாகும் என்றால் இந்த உலகம் அழிந்து மற்றொரு உலகம் வந்தால் சிலவேளை சாத்தியமாகும். அப்போது உலகின் மேல் இருந்த அத்தனை மனிதர்களும் அழிந்து போயிருப்பார்கள். அந்த சந்தர்ப்பத்தில் தியவன்னாவ மீஹரக்குகளுக்கு புத்தி வந்தால் என்ன புத்தி அழிந்து சீரழிந்தால் என்ன இரண்டும் ஒன்றுதான்.
ReplyDelete