Header Ads



கூரையை பிரித்து நுழைந்த கொள்ளை கும்பல் - தலைதெறிக்க ஓட்டம் பிடிப்பு


யாழில் கொள்ளையிட வந்த கும்பல் வீட்டினரின் சத்தத்தை அடுத்து அயலவர்கள் கூடியதால் தலைதெறிக்க ஓட்டம் எடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


இந்த சம்பவம் யாழ்.திருநெல்வேலி - பால்பண்ணை பகுதியில்  இன்று -26- அதிகாலை 2 மணிளவில்  இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


வீடொன்றுக்குள் இன்று அதிகாலை 2 மணியளவில் கூரையை பிரித்து நுழைந்த முகமூடி கொள்ளை கும்பல் வீட்டில் இருந்தவர்களை கத்திமுனையில் கட்டிவைத்து மிரட்டியுள்ளனர்.


இந் நிலையில் விட்டினரின் கூக்குரல் சத்தம் கேட்டு அயலவர்கள் கூடியதால் தப்பி ஓடியுள்ளது.


வீட்டின் கூரையை பிரித்து முகமூடி அணிந்தவாறு வீட்டிற்குள் இறங்கிய மூவரடங்கிய கும்பல் வீட்டில் உறக்கத்தில் இருந்தவரை தட்டி எழுப்பி இரண்டு கைகளையும் கயிற்றினால் கட்டிவைத்தனர்.


அதன் பின்னர கழுத்தில் கத்தினை வைத்து எங்கே நகையுள்ளது என அரை மணி நேரமாக மிரட்டியுள்ளனர்.


எனினும் கூக்குரல் இட்டு அயலவர்கள் வீட்டு விளக்கை ஒளிர விட்டதன் காரணமாக அச்சுறுத்திய கும்பல் தாங்கள் கொண்டு வந்த பெரிய கத்தியினையும் கைவிட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளது.


சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் கோப்பாய் குற்ற த்தடுப்பு பொலிஸ் பிரிவி வினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.   

No comments

Powered by Blogger.