Header Ads



பாராளுமன்றத்திற்குள் பாலியல் கொடுமை - கடும் நடவடிக்கைக்கு சுதர்ஷனி கோரிக்கை


பாராளுமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் பாராமரிப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த சில பிரதானிகள்  உட்பட சில அதிகாரிகள், அழகான பெண்களிடம்  ​மேற்கொண்டதாகக் கூறப்படும்  அங்க சேஷ்டைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு  மகளிர் பாராளுமன்ற உறுப்பினர் மன்றத்தின் தலைவி கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே பாராளுமன்ற பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹனதீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  


இது தொடர்பில் நாம் பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் கேட்ட போது, ​​விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.


மேலும், இந்த சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்றும் அவர் கூறினார்.


பாராளுமன்றத்தின்  பராமரிப்புப் பிரிவில் இளம் பெண்கள் குழு ஒன்று, சில தலைவர்களால் துன்புறுத்தப்படுவதாகவும் பாராளுமன்றத் தலைவர்களிடம் முறையிட்டனர்.


குறிப்பிட்ட சில மேலதிகாரிகளாலும் அதிகாரிகளாலும் பலவிதமான வன்முறைகளுக்கு ஆளாகியுள்ளதாகவும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு இனங்காத பட்சத்தில் பல்வேறு வகையான பழிவாங்கல்களுக்கு உள்ளாக நேரிடுவதாகவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


இது தொடர்பில் நீதி கோரி வரும் யுவதிகள் விசேட தொலைபேசி இலக்கம் (ஹொட்லைன்) அறிமுகப்படுத்தினால் அனைத்து தகவல்களையும் இரகசியமாக கூற தயாராக உள்ளனர்.


வேலை பறிபோகும் என்ற அச்சத்தில் சில ஊழியர்கள் இது குறித்து முறைப்பாடு செய்யக்கூட அஞ்சுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, வீட்டு பராமரிப்புத் துறையில் இளம் பெண்களுக்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் தயாராக உள்ளனர்.

No comments

Powered by Blogger.