Header Ads



விரைந்து திருமணம் செய்துகொள்ளும், பெண்களுக்கு பணப்பரிசு


சரியான வயதில் விரைந்து திருமணம் செய்துகொள்ளுமாறு பெண்களுக்கு பணப்பரிசு வழங்கி, அரசே ஊக்குவிக்கும் நடைமுறையை சீனாவில் தொடங்கி இருக்கிறார்கள்.


உலகளவில் அதிக மக்கள்தொகை கொண்டதாக திகழ்ந்த தேசம் சீனா. மக்கள்தொகையை குறைக்கும் முயற்சியில், தம்பதியர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ளலாம் என்றெல்லாம் கட்டுப்பாடு விதித்த சீனா, இன்று அடியோடு மாறிப்போயிருக்கிறது. மக்கள்தொகையில் நம்பர்.1 இடத்தை இந்தியாவிடம் பறிகொடுத்தது மட்டுமன்றி, கடந்த அரை நூற்றாண்டில் சீனா காணாத வரலாறாக அங்கே குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.


திருமணம் ஆனால்தானே குழந்தை? திருமணத்துக்கு எதிராக சீனர்கள் மத்தியிலான அதிருப்தி அதிகரித்ததில், அவற்றைப் போக்கும் நடைமுறைகளை சீனா தொடங்கியிருக்கிறது. குழந்தை வளர்ப்பு, பராமரிப்பு, கல்வி என குழந்தையை மையமாகக் கொண்ட செலவினங்கள் அதிகரித்ததன் காரணமாக, குழந்தை பிறப்பு விகிதம் அங்கே வெகுவாக சரிவு கண்டுள்ளது.  இதனையடுத்தே மேற்கண்டவாறு அறிவித்துள்ளது, 

No comments

Powered by Blogger.