ஏறாவூர் படுகொலைகளின் வரலாறு - நூல் வெளியீடு
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
1990ஆம் ஆண்டு ஏறாவூரில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட நூல் ஏறாவூர் தியாகிகள் ஞாபகார்த்தப் பேரவையினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
தியாகிகள் ஞாபகார்த்தப் பேரவையின் ஸ்தாபகத் தலைவரும் ஏறாவூர் பலநோக்குக் கூட்டுவுறச் சங்கங்களின் பொது முiகாமையாளருமான எம்.எல். அப்துல் லத்தீப் தலைமையில் கடந்த வெள்ளியன்று 18.08.2023 ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நூல் விமர்சன ஆய்வுரையை கலாநிதி அஷ்ஷெய்க் ரவூப் செய்ன் நிகழ்த்தினார்.
ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. நிஹாறா, நிருவாக அலுவலர் ஜாஹிதா உட்பட காத்தான்குடி, ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஏறாவூர் ஆகிய பிரதேசங்களின் ஊர்ப் பிரமுகர்கள், படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களின் உற்றார் உறவினர்கள், தியாகிகள் ஞாபகார்த்தப் பேரவையின் செயற்பாட்டாளர்கள், மார்க்கப் பிரமுகர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி நடுநிசிக்குச் சற்று முன்னராக ஏறாவூருக்குள் புகுந்த ஆயுதக் கும்பலால் ஆற்றங்கரை, சுரட்டையன்குடா, ஓட்டுப்பள்ளியடி, புன்னைக்குடா வீதி, ஐயன்கேணி, சத்தாம்ஹ{ஸைன் ஆகிய கிராமங்களில் நித்திரையிலிருந்தபோது பச்சிளம் பாலகர்கள் கர்ப்பிணிகள், வயோதிபர்கள், பெண்கள். குழந்தைகள் உட்பட 121 பேர் சுட்டும் வெட்டியும் குத்தியும் அடித்தும் தீவைத்தும் கொல்லப்பட்டிருந்தார்கள்.
Post a Comment