Header Ads



தனியார் மயப்படுத்தலே அரசாங்கத்திற்குள்ள மாற்று வழி


உரிமை மற்றும் ஒழுங்குமுறை அடிப்படையில், அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்படும் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவது சவாலானதாக மாறியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கி, தனியார்மயப்படுத்தலை மேற்கொள்வதே மாற்று வழி எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார். 


நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டு வரும் நிலையில், தொடர்ந்தும் வர்த்தக சமமின்மை நிலவுமாக இருந்தால், 10 வருடங்களுக்கு மேல் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியாமல் போகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். 


மீண்டும் பழைய பொருளாதார முறைமைக்கு செல்வதா அல்லது முறையான பொருளாதார திட்டத்துடன் எழுந்து நிற்பதா என்பதை தீர்மானிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். 


யுத்தம் நடைபெற்ற காலத்திலும் நாட்டின் பொருளாதாரம் திடமாக காணப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, யுத்த காலத்திலேயே நாட்டில் ஆடைக் கைத்தொழில்துறை ஆரம்பிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார். 


எனினும், தற்போதைய நிலையில் அரசாங்கத்தின் ஆதிக்கத்துடனான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது கடினமாக இருப்பதாகவும் கட்டுப்பாடுகளை நீக்குவதும் தனியார்மயப்படுத்தலுமே அரசாங்கத்திற்குள்ள மாற்று வழி எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 


நேற்று (15) நடைபெற்ற கொழும்பு தேயிலை வர்த்தகர் சங்கத்தின் 129 ஆவது வருடாந்த மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்விடயங்களைக் கூறினார். 

No comments

Powered by Blogger.