Header Ads



நீர்கொழும்பு துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி



- Ismathul Rahuman -

இன்று -12- பிடிபன மீன் விற்பனை நிலையத்திற்கு வந்த இனத்தெரியாத ஒருவர் அங்கு வாகணங்களுக்கு டிக்கட் வழங்கி பணம் அறவிடும்பவரின் தலையில் கை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். படுகாயமடைந்த அவரை நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். 

அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.  இச் சூட்டுச் சம்பவத்தில் நீர்கொழும்பு, பிடிபன வடக்கைச் சேர்ந்த நய்தப்புலாகே தனுஷ்க்க அஞ்சன உமயங்க பிரனாந்து எனும் 25 வயது நபரே பலியானார்.

 
துங்கல்பிட்டிய பொலிஸ்நிலைய பதில் பொறுப்பதிகாரி ரோஹன தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

No comments

Powered by Blogger.