விமான நிலையத்திற்கு வருபவர்களை பயமுறுத்தி, பணம் பறிக்கும் கும்பல்
இது குறித்து விசாரணை நடத்த பொது பாதுகாப்பு அமைச்சிற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்
இந்த குழுவில் விமான நிறுவனங்களின் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலின் நடவடிக்கையினால், கொரியாவில் பணிபுரிய வந்த இலங்கை இளைஞர்களுக்கான விமானங்கள் கூட தாமதமாகி வருவதாக இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் இராணுவ அதிகாரி ஒருவரின் உறவினரை இந்தக் கும்பல் மிரட்டி இருநூறு அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டதாக முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இமிகிரேஷன் அதிகாரிகள் போல் நடித்து, வரியில்லா பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு அருகில் உள்ள பகுதியில் ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு இளைஞர்களை கைது செய்து , அருகில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பணம் பறிக்கும் வேளையில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது
சுற்றுலா விசாவில் கொரியாவுக்கு செல்ல வரும் இளைஞர் குழுக்களே இந்தக் கும்பலால் அதிகம் குறிவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, இந்த ஏற்பாடு செய்யப்பட்ட குழுக்கள் பயணிகளை கடைசி நிமிடம் வரை தாமதப்படுத்துவதாகவும், இதனால் கொரியாவுக்கான விமானங்கள் உட்பட விமானங்கள் தாமதமாக வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸின் ஆலோசனையின் பேரில் இந்த ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் பற்றிய மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
Post a Comment